Sunday, November 26, 2006

ரெடி ... ஸ்டெடி..

ஹாய்,

எப்படி இருக்கீங்க..!

இன்னிக்கி கதீட்ரல் ரோடு பக்கம் போனேன். ஒரு புக் பேர் நடந்துகொண்டிருந்தது. சரியென்று உள்நுழைந்தால், செமயான புத்தகக் கலெக்ஷன்ஸ் இருந்தது.
எல்லால் இங்கிலீசு. நல்ல புத்தகம் நிறைய கிடைச்சுது. பார்த்துவிட்டு சரியென்று கிளம்பிவிட்டேன். இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போலும், அப்புறம் வந்து பார்க்கலாம்.

டிசம்பர் சீஸன் ஆரம்பித்து கல கல வென ஆங்காங்கே சங்கீத கச்சேர்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.
சென்னையில் அடிச்சு பெய்த மழை இப்பொழுது அமுங்கி விட்டதால் ரோடுகளில் டிரைனேஜ் வேலைகள் ஜரூராக நடந்து ஆங்காங்கே ஓரங்களில் சாக்கடையை எடுத்து விட்டெரிந்திருக்கிறார்கள்.
வழக்கம் போல மக்கள் எறும்புகூட்டிற்குள் அடைந்து கொள்வது போல சாரிசாரியாக அடித்து பிடித்து நகர்ந்து பத்து மணிக்குள் சீரியல் பார்த்துவிட்டு படுத்துக்கொண்டு விடுகிறார்கள்.

இதெல்லாம் தெரிந்ததுதானே? எதற்கு மறுபடியும்....?

அட.. எங்கேர்ந்தாவது ஆரம்பிக்கணுமோல்லியோ! அதான் இப்படி ஆரம்பிச்சுட்டேன்.
'பேஷ் பேஷ் நன்னாருக்கு' - அப்படின்னு இணையத்தில் இருக்கும் பிராமின் (?!ஹி ஹி.. தமிழன்கறத நிறூபிக்கறது எப்படி, இந்த மாதிரி ட்ரெண்டுக்கு தகுந்தமாதிரி ஏதாவது பிட்டு போட்டுத்தான்:-)) பிரண்ட்செல்லாம் சொல்றது நேக்கு இங்கேயே கேட்கிறது!

சரி .. போதும். அடுத்த பதிவுக்கு போகலாம்.

அன்புடன்,
கிரீஷ்.

No comments: