Friday, December 8, 2006

இரண்டு வரலாறு

இரண்டு
சும்மா சொல்லக்கூடாது கமர்சியல் படம் - ஜாலியாக பார்க்கக்கூடிய படம் - கிளாமர் தூக்கல் என்று ஒரு பார்முலா செட் செய்துவருகிறார் போலும் இயக்குநர் சுரேஷ். டிபிகலாக ஒரு பார்முலாவில் அழகான பெண்களுடன் மாதவன்(கள்) போட்டும் ஆட்டம் - கொஞ்சமே கொஞ்சம் முக்கிய கதை என்று ஜாலியாக ஓடுகிறது இரண்டு. சிட்டியில் கொஞ்சம் டிக்கட் ரொம்பி வழிகிறது இந்த படத்திற்குத்தான் என்பது என் கருத்து. நான் பார்த்த அந்த மதிய நேரத்தில் உதயம் தியேட்டரில் ஹவுஸ் புல் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு
நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன் நேற்றுதான் பார்க்க முடிந்தது. படம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துது. அஜித் - ஆனால் பெரிதாக எந்த வித்தியாசமும் காட்டாமல் நடிக்கிறதுதான் கொஞ்சம் உறுத்தல். பெரியவராக வரும் நடை உடை பெண் போன்ற அஜித் செம பாத்திரப் படைப்பு. படம் பாதி வரை வரும் சஸ்பென்ஸ் நிஜ்மாகவே சூப்பர். அப்புறமும் கூட கடைசி வரை அந்த சஸ்பென்ஸ் சிறப்பாகவே இருக்கிறது. காட்பாதர் ங்கற இங்கிலீஷ் படத்துக்கு பக்கத்தில் கூட வரமுடியாத கதை என்றாலும், படம் மிக நல்ல படங்களில் ஒன்று என்றுதான் கருதுகிறேன்.
படத்தின் மெலோடி பாடல் ஒன்று நீண்ட நாட்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும். அஸுன் சும்மாக்கோச்சுக்கும் இருந்தாலும், நல்லாவே மனசுல பதியறாரு.